இலங்கை நவீன தேசிய பொறியியல் தொழினுட்ப மரபுரிமை அருங்காட்சியகம் |
இலங்கை நவீன தேசிய பொறியியல் தொழினுட்ப மரபுரிமை அருங்காட்சியகமானது திறக்கப்பட்டது................... நவீன தேசிய பொறியியல் தொழினுட்ப மரபுரிமை அருங்காட்சியகமானது, இலங்கை பொறியியல்துறை நிறுவனத்தின் கருத்துருவாக்கத்துடனும் சம்பத் வங்கியின் பிரதான அனுசரணையுடனும், கொழும்பு தேசிய இயற்கை விஞ்ஞான நூதனசாலையின் வழிகாட்டலிலும் உருவாக்கப்பட்டது. இவ் அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கெளரவ அமைச்சர் மேன்மைதங்கிய கலாநிதி ஜெகத் பாலசூரிய (தேசிய மரபுரிமைகள் அமைச்சு) அவர்களும், கெளரவ அமைச்சர் மேன்மைதங்கிய கலாநிதி பவித்திராதேவி வன்னியாராச்சி (சக்தி வள அமைச்சு) அவர்களும், மதிப்பிற்குரிய செயலாளரான கலாநிதி நந்தா விக்கிரமசிங்க (தேசிய மரபுரிமைகள் அமைச்சு) அவர்களும் மற்றும் ஏனையோரும் பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.
|