பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)
முதற் பக்கம் அரும்பொருட் காட்சியகங்கள் தேசிய சமுத்திர நூதனசாலை காலி

தேசிய சமுத்திர நூதனசாலை காலிதென் இலங்கை கடற் கரை வளயத்தினுள் கடல் உயிரின விஞ்ஞானம் மற்றும் மனித இன விஞ்ஞானம் பற்றிய விடயங்கள் தொடர்பாக பொது மக்களை அறிவூட்டும் ஒரே நூதனசாலை இதுவாகும். 1671 இல் நிர்மாணிக்கப்பட்டுள்ள புராதன ஒல்லாந்து கலைஞ்சியசாலையினுள் இந் நூதனசாலையை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனை 1992 ஆம் ஆண்டிலிருந்து பொதுசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

2004 டிசம்பர் 26 ஆம் அன்று ஏற்பட்ட சுனாமி ​பேரலயினால் இந் நூதனசாலை முழுமையாகவே அழிந்து அதன் காட்சிப் பொருற்கள் அனைத்திற்கும் கேடு ஏற்பட்டன. இலங்கை நெதர்லாந்து கலாசார ஒத்துழைப்பு வேலைத்தி்ட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசு சமுத்திர நூதனசாலையை புணரமைக்க நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்று ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட புணரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய சமுத்திர நூதனசாலை மக்களின் காட்சிக்காக மீள திறக்கப்பட்டுள்ளது.

இதன் முதலாம் காட்சி அறையில், தென் இலங்கையில் கடல்சார் வயாபாரத்திற்காகவும் பயணிகளை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்திய படகுகளை காட்சிக்காக வைத்துள்ளன. மீனவ மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் கடற்றொழில்சார் உபாயவழிகள் ஆகியவற்றை மனக்கவரும் சிலைகள் மற்றும் படிவங்களைக் கொண்டு காட்டப்பட்டுள்ளன. இதன் இரண்டாம் காட்சி அறையினால் சமுத்திரத்தை சார்நத சுற்றாடல் தொகுப்பினையும் அதன் தாவர மற்றும் மிருக இனங்களையும் கவனத்தில் கொண்டிருப்பதை காணலாம். இங்கு கண்டல் படிவங்கள். கடற் கரையில் வளரும் தாவர இனங்கள், கடலாமைகள், கடற் பறவைகள் மற்றும் கடல் வாழ் பால்குடி மிருகங்கள் என்பவற்றை அதனை வகைபடுத்தும் தரவுகளோடு காட்சிக்காக வைத்துள்ளன. நூதனசாலையில் தொங்கவைத்திருக்கும் மிகப்பெரிய திமிங்கிலத்தின் எலும்புக்கூடு தங்களுக்கு அரிய அனுபவத்தை கொண்டு தருவதுடன் பலழபாறைகளின் படிவங்கள், கடல்சார் சிப்பி வகைகள், முள்ளந்தண்டற்ற உயிரினங்களும் இங்கு பார்வையிடலாம்.

தேசிய சமுத்திர நூதனசாலை தென் மாகாணத்து பார்வையாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு கல்வி நிலையமாக செயற்படுகின்றது.

 

அவதானம்:
பெயர் : டி.கன்டம்பி
பதவி : பாதுகாப்பாளர்
முகவரி : தேசிய சமுத்திர நூதனசாலை
காலி
தொலைபேசி இல. : 091 2242261
மின் அஞ்ஞல் :

pic
pic
pic
pic
pic
pic
Image Gallery : தேசிய சமுத்திர நூதனசாலை காலி